அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Nov 28, 2019, 3:52 PM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு என புதியதாகத் தனி கூட்டுறவு ஒன்றியம் ஏற்படுத்தப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 28-ம் தேதி வேலூர் ஆவினிலிருந்து திருவண்ணாமலை ஒன்றியம் பிரிக்கப்பட்டு 17 பேர்கொண்ட இடைக்கால நிர்வாகக் குழு உருவாக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரடியாக நியமனம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்துடன் இணைந்துதான் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வந்தன. இரண்டு மாவட்டங்களிலிருந்து, நாள்தோறும் சுமார் ஐந்து லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றில் இரண்டு லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ளவற்றில் பால் பாக்கெட், நெய், பால்கோவா, மோர், லஸ்ஸி, குல்ஃபி உள்ளிட்ட பால் பொருள்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு என புதியதாகத் தனி கூட்டுறவு ஒன்றியம் ஏற்படுத்தப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 28-ம் தேதி வேலூர் ஆவினிலிருந்து திருவண்ணாமலை ஒன்றியம் பிரிக்கப்பட்டு 17 பேர்கொண்ட இடைக்கால நிர்வாகக் குழு உருவாக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரடியாக நியமனம் செய்யப்பட்டார். 

இதனிடையே, தேர்தலையே நடத்தாமல் கூட்டுறவுச் சங்க விதிகளுக்குப் புறம்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் பதவியை உடனே பறிக்க வேண்டும் என்று வாணாபுரம் பால் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பச்சமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கூட்டுறவு விதிகளைப் பின்பற்றாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக நியமிக்கப்பட்டது செல்லாது. தேர்தல் நடத்தாமல் தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்தது சங்க விதிகளுக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

click me!