வலுவடையும் சிட்ராங் புயல்.. மேற்கு வங்கம், ஒடிசாவில் கனமழை எச்சரிக்கை..! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை?

By karthikeyan VFirst Published Oct 24, 2022, 2:29 PM IST
Highlights

சிட்ராங் புயல் நாளை அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

சிட்ராங் புயல் நாளை(அக்டோபர் 25) அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடலின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ராங் புயலாக வங்காள விரிகுடாவில் வடக்கு திசையில் 15 கிமீ வேகத்தில் நகர்ந்து புயலாக மையம் கொண்டுள்ளது.

இதையும் படிங்க - யார் அந்த 4 பேர்..! ஜமேசா முபின் தூக்கி கொண்டு சென்ற மர்ம பொருள் என்ன..? சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை

சிட்ராங் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று அக்டோபர் 25 (நாளை) அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதனால் தீபாவளியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோலவே இன்று தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்தது.  நாளையும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க - திடீரென வெடித்த சிலிண்டர்..! இரண்டாக உடைந்த கார்...! துடி துடித்து ஒருவர் பலி

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 
 

click me!