சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து (தடம் எண்.70 வி) புறப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்தை ஓட்டுநர் ரகுநாத் இயக்கினார். நடத்துனர் சின்னையன் பணியில் இருந்தார். இந்த பேருந்து, ஜிஎஸ்டி சாலை வழியாக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, டிரைவர் அதிவேகத்தில் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.
இதையும் படிங்க;- பள்ளி வகுப்பறையில் மாணவன், மாணவி தற்கொலை முயற்சி.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!
undefined
இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட வழிகாட்டி பலகையை தாங்கி நிற்கும் ராட்சத இரும்பு தூண் மீது மோதியது. இதில், அந்த வழிகாட்டி பலகை உடைந்து சாலையில் நடுவே பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சண்முகசுந்தரம் படுகாயமடைந்தார். இதேபோல், எதிர் திசையில் வேன் ஒட்டி சென்ற சத்தியநாராயணன் என்பவரும் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில், கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சிய விபத்து! வாக்கிங் சென்றவர்கள் மீது மோதிய கார்! தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி