பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை... ஜூடோ பயிற்சியாளருக்கு 14 நாட்கள் காவல்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 31, 2021, 7:20 PM IST
Highlights

பாலியல் வழக்கில் ஜூடோ பயிற்சியாளர் கொபிராஜை ஜூன் 14 வரை சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்தடுத்து பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பத்ம சேஷாத்ரி மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வணிகவியல் ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மாணவிகளின் பாலியல் புகார் ஆதாரத்துடன் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனும், மகரிஷி வித்யா  மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

ராஜகோபாலனைத் தொடர்ந்து சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன், சென்னை செனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி என அடுத்தடுத்து  பாலியல் தொந்தரவு குறித்த புகார்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. 

இந்நிலையில் சென்னையில் தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக உள்ளவர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாநகரைச் சேர்ந்த 26 வயது பெண், 2014ம் ஆண்டு தற்காப்பு பயிற்சியாளரான கெபிராஜின் பயிற்சி மையத்தில் இணைந்ததாகவும், ஒருமுறை நாமக்கல்லில் இருந்து போட்டியை முடித்துக் கொண்டு  காரில் திரும்பும் வழியில் அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒத்துழைக்காததால் தன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரின் பேரில் வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல், பாலியல் பலாத்காராம், கொலை மிரட்டல்,  பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் போலீசார், கெபிராஜை கைது செய்தனர். அதன் பின்னர் கெபிராஜிடம் விசாரணை நடத்திய போலீசார், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கெபிராஜை ஜூன் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

click me!