சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி... அனைத்து காவல் நிலையத்திற்கும் டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Jun 25, 2020, 11:57 AM IST
Highlights

விசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய கூடாது என்று தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய கூடாது என்று தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளத்தில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், இரண்டு எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அனைத்து காவல்நிலையத்திற்கும் டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், விசாரணை கைதிகளை காவலில் விசாரிக்கும் போது போலீசார் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணை காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விசாரணை கைதிகளை காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை செய்ய கூடாது. தடுப்பு காவல் மையங்களுக்கு அழைத்து சென்றே விசாரணை நடத்த வேண்டும்.

ஜாமீனில் வரும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை உடனடியாக போலீஸ் ஜாமின் தர வேண்டும். ஜாமினில் வர முடியாத விசாரணை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையுடன், கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

click me!