ரெம்டெசிவர் மருந்து விலை ரூ.899 மட்டும் தான்... அதிக விலை கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 15, 2021, 12:27 PM IST
Highlights

காடிலா ஹெல்த்கேர் (Zydus Cadila) நிறுவனம் தயாரிக்கும்  ரெம்டாக் ரெம்டெசிவர் ஊசி (Remdac Remdesivir Injection) 899 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்காக ரெம்டெசிவிர் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலையில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசே அந்த மருந்தை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது.

 

அனைத்து மக்களுக்கும் இந்த மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த மருந்தின் விலையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து, ரூ.5,400 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.899 முதல் ரூ.3,490 என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

 

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.1,568 என்ற விலையில் தமிழக அரசு விநியோகிக்கத் தொடங்கியது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. இதனால் கொரோனா பரவக் கூடும் என அதிகாரிகள் அச்சப்பட்டதால், தற்போது கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஆனாலும், பதுக்கல் காரணமாக ரெம்டெசிவிர் மருந்துக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. சில இடங்களில் ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்து விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் காடிலா ஹெல்த்கேர் (Zydus Cadila) நிறுவனம் தயாரிக்கும்  ரெம்டாக் ரெம்டெசிவர் ஊசி (Remdac Remdesivir Injection) 899 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

 

சென்னையில் இந்த மருந்தை மெடிஹாக்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (Medihauxe international Pvt LTD) என்ற நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மயிலாப்பூர் கற்பகாம்பாள் நகரில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. தொலைபேசி எண்: 9841049509. இங்கு  899 ரூபாய்க்கு ரெம்டாக் ரெம்டெசிவர் மருந்தை வாங்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு செல்லவது கட்டாயம். 

தேவையான ஆவணங்கள்

1. மருந்துச்சீட்டு (prescription)

2. மருத்துவமனை சிகிச்சை அறிக்கை (hospital treatment report)


3.கொரோனா பாசிட்டிவ் ரிப்போர்ட் (covid positive report)


4.கொரோனா நோயாளி மற்றும் மருந்து வாங்க வரும் அவருடைய அட்டன்டரின் அடையாள அட்டை ( patient I'd proof
 and attender I'd proof) ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் 

இந்த ரெம்டாக் ரெம்டெசிவர் மருந்து சென்னையைத் தவிர திருச்சி, கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தனியார் பார்மஸிகளிலும் கிடைக்கிறது. 

click me!