கோயம்பேடு மார்க்கெட் இடம் மாற்றம்...? இல்லையென்றால் இழுத்து மூடப்படும்.. எச்சரிக்கும் காவல் ஆணையர்..!

By vinoth kumarFirst Published Apr 27, 2020, 12:32 PM IST
Highlights

கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும், 4 பேருக்கு வந்தால்  சந்தையை மூட வேண்டி வரும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். 

கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும், 4 பேருக்கு வந்தால்  சந்தையை மூட வேண்டி வரும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாள்தோரும் காய்கறிகள் வாங்க சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மக்கள் வருகை புரிகின்றனர். மிகவும் நெருக்கமான பகுதியாக மார்க்கெட் உள்ளதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிக்கலுக்குரியதாக உள்ளது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை இடம் மாற்றுவது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற்றது.

இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் மற்றும் வியாபாரி சங்க நிர்வாகிகள் பலர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். சமூக இடவெளியை கடைப்பிடிப்பதில் சிரமங்கள் உள்ள நிலையில் மக்களும் பலர் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிவதை குறைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன் இந்த சந்தையை 3ஆக பிரிக்காவிட்டால், ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேருக்கு வந்தால் சந்தையை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்படும். ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கூட கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை. ஆகையால், கோயம்பேடு சந்தையை பிரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என விஸ்வநாதன் தெரிவித்தார்.  இந்த விவகாரம் தொடர்பாக இன்று எந்த முடிவு எட்டப்படவில்லை. இந்த இடம் மாற்றம் தொடர்பாக நீங்கள் உறுப்பினர்களிடம் கலந்து பேசி நாளை முடிவை தெரிவிக்கும் படி கூறியுள்ளனர். ஆகையால்,  இந்த கூட்டம் நாளை மீண்டும் நடைபெற உள்ளது. 

click me!