#Red Alert ; குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் ; 4 நாட்களுக்கு தொடரும் கன மழை ; வானிலை மையம் எச்சரிக்கை

By Kanmani PFirst Published Nov 15, 2021, 11:27 AM IST
Highlights

கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் நிறுக்குழு மூழ்கின. அதோடு கடந்த  சில நாட்களாக கொட்டி தீர்த்த கன மழை காரணமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள 28 ஏரிகளில், 26 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 578 ஏரிகளில் 366 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. மீதமுள்ள 68 ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன. ஏரிகள் நிரப்பின. 

கடந்த 2015 மழை வெள்ள பாதிப்புகளை இந்த வருட மழை நினைவூட்டுவதாகவே இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழை 
நீர் வடியாத சூழலில் அடுத்ததாக மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி சுற்று வட்டாரத்தில் பெய்து வரும் பேய் மழையின் காரணமாக அங்கு பலத்த தேசம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே வட தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இன்று கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு  மிக கனமழைக்கான எச்சரிக்கையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தருமபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும்  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காண மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு நாளை 16-ம் தேதி நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  மேலும், நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மேலும் வலுப்பெற உள்ளவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை   விடுத்துள்ளது.

click me!