இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Nov 14, 2021, 12:31 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் மூடப்பட்டு கிடந்தன.  இருப்பினும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியான பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து  பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 1 முதல், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

விடுமுறை நாட்களை ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் மூடப்பட்டு கிடந்தன.  இருப்பினும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியான பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து  பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 1 முதல் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

இதையும் படிங்க;- இனி இந்த வாழ்கையே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் அளவிற்கு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கலங்கும் ஜோதிமணி.!

அதன்பின் பல்வேறு தரப்பிலும் எழுந்த கோரிக்கையால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.  இதனையடுத்து, தீபாவளிப் பண்டிகை, தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கடந்த ஒரு வாரகாலமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை சில மாவட்டங்களில் ஓய்ந்தாலும் கன்னியாகுமரியில் மழை, வெள்ளம் நீடிக்கிறது. இந்நிலையில் மழை ஓய்ந்த பகுதிகளில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தனியார் பள்ளிகள் தரப்பில் முழு வீச்சில் பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளனர். 

இதையும் படிங்க;- யாரையும் சும்மா விடாதீங்க.. தற்கொலை செய்த மாணவியின் பரபரப்பு கடிதம்.. காதல் திருமணம் செய்த ஆசிரியர் கைது.!

இந்நிலையில், அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை கொஞ்சமாவது மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

click me!