உஷார் மக்களே.. மழை காரணமாக காய்ச்சல், சளி, தோல் பாதிப்புகள் ஏற்படலாம்.. சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை.!

By vinoth kumarFirst Published Nov 12, 2021, 3:03 PM IST
Highlights

அனைத்து மருந்துகளும் தேவையான எண்ணிக்கையில் உள்ளன. 21,936 ஊழியர்கள் டெங்கு தடுப்பு  நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். டெங்கு தடுப்பு மருந்துகள் உட்பட ரூ.167 கோடி மதிப்பிலான அனைத்து  நோய்களுக்கான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்தில் வானிலை இயல்பான நிலைமையில் இருந்தால் திட்டமிட்டபடி வரும் 14ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களை காக்கும் வகையில் 200 வார்டுகளிலும் மருந்து, மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு முகாமை முதற்கட்டமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

இதையும் படிங்க;- Chennai Floods: பேரிடர் காலத்தில் சென்சார் கதவு தேவையா? சென்னை வெள்ளத்தில் தொழிலதிபருக்கு நேர்ந்த கதி..!

இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- சென்னையில் இன்று 200 இலவச மருத்துவ முகாம்கள் அரசு சார்பாகவும், 200 முகாம்கள் தனியார் சார்பாகவும் நடைபெறுகிறன. மழை காரணமாக காய்ச்சல், சளி, தோல் பாதிப்புகள் போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம்.. 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி என்ன செய்தார்? பற்றவைக்கும் பாஜக.!

அனைத்து மருந்துகளும் தேவையான எண்ணிக்கையில் உள்ளன. 21,936 ஊழியர்கள் டெங்கு தடுப்பு  நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். டெங்கு தடுப்பு மருந்துகள் உட்பட ரூ.167 கோடி மதிப்பிலான அனைத்து  நோய்களுக்கான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.

டெங்கு மற்றும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு மற்றும் கோவிட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. மழை இல்லாமல் இருந்தால் திட்டமிட்டபடி வரும் 14ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், தொற்று நோய் பரவாமல் இருக்க நோய் தடுப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுடன் இணைந்து தனியார் மருத்துவமனை சார்பில் நோய் தடுப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

click me!