Chennai Floods: மீட்புப் பணியில் களமிறங்கிய போலீஸார்.. மாநகராட்சி நிர்வாகத்துக்கு தோள் கொடுத்து அசத்தல்.!

By vinoth kumarFirst Published Nov 11, 2021, 8:22 PM IST
Highlights

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக 45 இடங்களில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் சாய்ந்துள்ளன. போக்குவரத்திற்கு இடையூறாக சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். 

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில்  சென்னை பெருநகரில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், நேற்று இரவு முதல் இடைவிடாமல் கனமழையானது பலத்த காற்றுடன் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் அதன் கிளைகள் சாய்ந்தன. இதனால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே மாநகராட்சியின் சார்பில் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற 6 நவீன ஹைட்ராலிக் இயந்திரங்களும், 2 மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 15 மண்டலங்களிலும் உள்ள 371 கையினால் இயக்கும் மர அறுவை இயந்திரங்களும் ஏற்கனவே அந்தந்த வார்டுகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக 45 இடங்களில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் சாய்ந்துள்ளன. போக்குவரத்திற்கு இடையூறாக சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். மழையின் காரணமாக 45 இடங்களில் விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளில் உடனடியாக 31 இடங்களில் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களிலும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் சாலைகளிலிருந்து அகற்றப்பட்டு வருகிறது. 

இதனிடையே சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில்;- சென்னை தியாகராய நகர் காவல் எல்லைக்குட்டப்பட்ட மாம்பலம் காவலர் குடியிருப்பு, கோடம்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு முதல் தெரு விருகம்பாக்கம் வெங்கடேஸ்வர தெரு, தேனாம்பேட்டை டிடிகே சாலை ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலையில் விழுந்த மரங்களை ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் அறுவை இயந்திரம் உள்ளிட்ட கருவிகளுடன் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். 

click me!