Chennai Floods: பேரிடர் காலத்தில் சென்சார் கதவு தேவையா? சென்னை வெள்ளத்தில் தொழிலதிபருக்கு நேர்ந்த கதி..!

By vinoth kumarFirst Published Nov 12, 2021, 11:49 AM IST
Highlights

சென்னை சாலிகிராம் அடுக்குமாடி குடியிருப்பு முதல் மாடியை சேர்ந்தவர் பாலாஜி(48). தொழிலதிபரான இவர் தனது மனைவி விஜயலட்சுமி, மகள் காவியா ஆகியோருடன் வசித்து வருகிறார். தொழிலதிபர் என்பதால் பாதுகாப்பு கருதி இவரது வீட்டிற்கு சென்சார் பொருத்தப்பட்ட கதவு அமைக்கப்பட்டிருந்தது. 

சென்னையில் பெய்த கனமழையால் சென்சார் கதவு வேலை செய்யாததால், வீட்டுக்குள் சிக்கித் தவித்த தொழிலதிபர் குடும்பத்தை பல மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். 

சென்னை சாலிகிராம் அடுக்குமாடி குடியிருப்பு முதல் மாடியை சேர்ந்தவர் பாலாஜி(48). தொழிலதிபரான இவர் தனது மனைவி விஜயலட்சுமி, மகள் காவியா ஆகியோருடன் வசித்து வருகிறார். தொழிலதிபர் என்பதால் பாதுகாப்பு கருதி இவரது வீட்டிற்கு சென்சார் பொருத்தப்பட்ட கதவு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் கடந்த நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- 10ம் வகுப்பு பையனை இழுத்துக்கொண்டு ஓடிய 35 வயது ஆண்டி.. ஒரு வழியாக 6 நாட்களுக்கு பிறகு கைது..!

கனமழை காரணமாக கதவில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் பழுதானதாக கூறப்படுகிறது. வீட்டின் கதவு திறக்க முடியாமல் தொழிலதிபர் தனது குடும்பத்துடன் வீட்டிற்குள்ளேயே நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிக்கி வெளியேற முடியாமல் தவிர்த்து வந்துள்ளார். பல முறை வெளியே முயற்சி செய்தும் கதவு திறக்க முடியவில்லை. இதனால், தொழிலதிபர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காத மாமா.. வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு.. திக் திக் வீடியோ.!

இதையும் படிங்க;- ஆடைகளை உருவி தினமும் அட்டகாசம்.. வலி தாங்க முடியாமல் உணவில் விஷம் வைத்த மனைவி.. ஜஸ்ட் மிஸில் தப்பிய கணவர்.!

இதனையடுத்து, தொழிலதிபர் பாலாஜி உடனே தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தொழிலதிபர் வீட்டிற்கு வந்து கதவை திறக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.  ஆனாலும் கதவு திறக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ராட்சத கட்டர் உதவியுடன் வீட்டின் ஜன்னலில் பொருத்தப்பட்டுள்ள கிரில் கேட்டை வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். பிறகு ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சென்று தொழிலதிபர் பாலாஜி மற்றும் அவரது மகள், மனைவியை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், பேரிடர் காலங்களில் சென்சார் கதவின் பாதுகாப்பு பொதுமக்கள் மத்தியில் பல்வேறு  கேள்விகளை எழுப்பி வருகிறது. 

click me!