ஒரே நாளில் 2015ஐ நினைவுப்படுத்திய மழை.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு அடிச்சு தூக்கும் மழை.. பீதியில் சென்னை மக்கள்.!

By vinoth kumarFirst Published Nov 7, 2021, 10:58 AM IST
Highlights

நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, போரூர், கோயம்பேடு, ஆவடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

சென்னையில் 2015ம் ஆண்டிற்கு பிறகு நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சென்னையில் கடந்த 100 ஆண்டு கண்டிராத மழை மற்றும் வெள்ளத்தை 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு காண்பித்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் ஏற்படுத்திய பாதிப்பில் பலர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, உணவு இல்லாமல் தவித்தது இன்னமும் நம் கண் முன்னால் வந்து செல்கிறது. இந்த சம்பவம் மின மோசமான பேரிழவாக அப்போது பார்க்கப்பட்டது.  கடந்த கால பாதிப்புகளில் இருந்து இன்னும் மீண்டு வராத மக்களை தற்போது பெய்துவரும் அதிகனமழை மிரட்டி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் இதுபோன்ற மழையைப் பார்த்திராத மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அதேசமயம் அச்சமும் அடைந்தனர். 

வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, போரூர், கோயம்பேடு, ஆவடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில்  தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கன மழை நீடிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கு மாம்பலத்தில் இருந்து தி.நகர் செல்லக்கூடிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாலும், துரைசாமி சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கியதாலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், கனமழையால் காரணமாக தீயணைப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில்  தி.நகர் ரங்கநாதன் தெருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

click me!