சென்னை மக்களே உஷார்.. இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை.. இன்னும் 3 மணிநேரத்திற்கு நீடிக்குமாம்..!

By vinoth kumarFirst Published Nov 7, 2021, 8:27 AM IST
Highlights

வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க;- 10ம் வகுப்பு பையனை இழுத்துக்கொண்டு ஓடிய 35 வயது ஆண்டி.. ஒரு வழியாக 6 நாட்களுக்கு பிறகு கைது..!

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, போரூர், கோயம்பேடு, ஆவடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில்  தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதையும் படிங்க;- கைது செய்யப்பட்ட பில்லா ஜெகன்.. அடுத்த நொடியே அமைச்சரின் தீவிர ஆதரவாளரை தூக்கி எறிந்த திமுக.!

இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கன மழை நீடிக்கும் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிகபட்சமாக இதுவரை வில்லிவாக்கத்தி்ல் 16 செ.மீ மற்றும் நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக செம்பரபாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து யாரால் முதல்வரானார் என்பது உலகிற்கே தெரியும்.. மீண்டும் சீனாக சீனுக்கு வரும் TTV.!

நேற்றிரவு முதல் தமிழகத்தில் மதுரை, தஞ்சை, விழுப்புரம் , சேலம், திண்டுக்கல், கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

click me!