சென்னையை மிரட்டும் கருமேகங்கள்..! கனமழைக்கான அறிகுறி..?

By Manikandan S R SFirst Published Dec 4, 2019, 10:18 AM IST
Highlights

சென்னையில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதன்காரணமாக சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாநிலத்தில் இருக்கும் முக்கிய அணைகள் பல நிரம்பிவிட்டதால் அதிகப்படியான நீர் ஆறுகளில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மழையின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் சென்னையில் காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து கனமழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. காலையில் எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம், பொன்னேரி, புரசைவாக்கம் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. இரண்டு நாட்கள் சென்னையில் கனமழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!