உண்மையான கெத்து , கம்பீரம் தமிழ்நாட்டுலதான் இருக்குது..!! வேட்டி சட்டைக்கு மாறிய வெளிநாட்டு பயணிகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2019, 6:24 PM IST
Highlights

 பிரதமர் மோடி சீன அதிபரை வேட்டி சட்டையுடன் வரவேற்றதைக் கண்டே  தமிழக பாரம்பரிய ஆடையின் மகத்துவத்தை உணர்ந்தோம். 

மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் . இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இரு நாட்டுக்கிடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் .  அப்போது சீன பிரதமர் தமிழ் பாரம்பரியத்துடன் வரவேற்கப்பட்டார் , தமிழர்களின் பாரம்பரியத்தை கண்டு  வியந்த அதிபர் ஜி ஜின்பிங் தமிழர்களின் வரவேற்பை பாராட்டினார்.

 

அத்துடன் மாமல்லபுரத்தில் அவரை வரவேற்ற இந்திய பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வெண்நிற வேட்டி சட்டை அணிந்து தோளில் துண்டு போட்டு  சீன அதிபரை கம்பீரத்துடன் வரவேற்றார் . பின்னர் அவருக்கு தமிழ் கலை கலாச்சாரங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது .   இந்த இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது , இந்நிலையில் மாமல்லபுரத்திற்கு வர  வெளநாட்டினர் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரத்திற்கு வரும்  வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .  அங்கு வரும் வெளிநாட்டினர் வேட்டி ,  சட்டை ,  சேலை ,  அணிய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .  இந்நிலையில் அமெரிக்கா ,  சீனா , குரோஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகள்  தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி,  சட்டைகள், சேலை உள்ளிட்ட அடைகளை அணிந்து மாமல்லபுரத்தின் சிற்பங்கள் கண்டுகளித்து வருகின்றனர். 

இதுகுறித்து தெரிவிக்கும் வெளிநாட்டினர்,  தமிழக சுற்றுலா தலங்களை ஏற்கனவே கண்டு ரசித்து இருக்கிறோம் ,  அத்துடன் சிதம்பரம் , தஞ்சாவூர் ,  மதுரை ,  காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வேட்டி, சேலையுடன் வழிபட்டு வருவதை கண்டு வியக்கிறோம்.  அத்துடன் பிரதமர் மோடி சீன அதிபரை வேட்டி சட்டையுடன் வரவேற்றதைக் கண்டே  தமிழக பாரம்பரிய ஆடையின் மகத்துவத்தை உணர்ந்தோம்.  இதனால் தமிழகம் வரும்போதெல்லாம் வேட்டி சட்டை, சேலை அணிந்து வலம் வர விரும்புகிறோம்.  உலகிலேயே சிறந்த ஆடை,  எளிய ஆடைகள், தமிழர்களின் வேட்டை சட்டை , சேலைதான் என அவர்கள் தெரிவித்தனர். 

click me!