சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய ஐ.ஜி. நியமனம்... பொன்.மாணிக்கவேல் போல சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பரா..?

Published : Dec 03, 2019, 04:12 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய ஐ.ஜி. நியமனம்... பொன்.மாணிக்கவேல் போல சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பரா..?

சுருக்கம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் டிசம்பர் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. 

பொன்.மணிக்கவேலின் பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதிய ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் டிசம்பர் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதிய ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்புவை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே சென்னையில் இணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார். நிர்வாக துறையில் இருக்கும் இவரை தற்போது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். பொன்.மணிக்கவேல் விசாரித்த அனைத்து வழக்குகளையும் டி.எஸ்.அன்பு விசாரிக்க உள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!