சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் ஜாமீனில் எடுத்த நதியா வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மேலும் இரண்டு வெடிக்காத பெட்ரோல் குண்டு கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மத்திய உள்துறையின் உத்தரவின் பேரில் (என்ஐஏ) தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
undefined
இதையும் படிங்க: சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! மகள் மூலம் வலை விரிப்பு! ஒரு நைட்டுக்கு எவ்வளவு தெரியுமா? பகீர்!
அதில், கருக்கா வினோத் தொடர்பை ஆராய்ந்தபோது அவரை முந்தைய வழக்கில் ஜாமீனில் எடுத்தது நதியா என்பது தெரியவந்தது. இதனையடுத்து கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த நதியா வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை ஈடுபட்டது. அப்போது நதியாவிடம் பறிமுதல் செய்த செல்போன்களை ஆராய்ந்தபோது 17 சிறுமிகளின் புகைப்படங்கள் ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளன. சிறுமிகளை நதியா பாலியல் தொழிலில் தள்ளிய அதிர்ச்சி தகவல் என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக என்ஐஏ கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரபல பெண் பாலியல் புரோக்கர் நதியா(37), அவரது சகோதரி சுமதி(43), சகோதரியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன்(42), நேபாள நாட்டை சேர்ந்த இளம் பெண் மாயா ஒலி(29) உள்ளிட்ட 7 பேரை தமிழக போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.