பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்படின்னா நீங்க போற பஸ் எங்க நிக்கும் தெரியுமா? இதோ முழு தகவல்.!

By vinoth kumar  |  First Published Jan 12, 2023, 8:59 AM IST

பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட படையெடுப்பார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்காலிகமாக 6 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதவரம் , கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட படையெடுப்பார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பொங்கல் திருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் வரும் 14ம் தேதிவரை இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- TASMAC : மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை! முழு விபரம் இதோ

அதன்படி, சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய  நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இன்று முதல் 14ம் தேதிவரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10,632 பேருந்துகள் என மொத்தம் 16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏதுவாக சென்னையில் 6 பேருந்துகள் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* கோயம்பேடு பேருந்து நிலையம் :  

திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை ஆகிய ஊர்களுக்கும், மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி, உதகை, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கான சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன.

* மாதவரம் புதிய பேருந்து நிலையம்:  

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

* கே.கே.நகர் பேருந்து நிலையம் :  

கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம், புதுச்சேரி வழியாக பேருந்துகள் செல்லும்.

* பூவிருந்தவல்லி  பேருந்து நிலையம் : 

 வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி செல்லும் பேருந்துகளும், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் செல்லும். 

* தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் :  

திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, சேத்துப்பட்டு, போளூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன.

* தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம் : 

திண்டிவனம் வழியாக விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் புறப்படுகின்றன.

இதையும் படிங்க;- திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை சொன்னீங்க.. அப்படியானால் எல்லாமே செட்டிங்கா முதல்வரே? மநீம

click me!