ஷாக்கிங் நியூஸ்.. திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் உயிரிழப்பு - துணிவு பட கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்..!

Published : Jan 11, 2023, 09:19 AM ISTUpdated : Jan 11, 2023, 01:06 PM IST
ஷாக்கிங் நியூஸ்.. திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் உயிரிழப்பு - துணிவு பட கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்..!

சுருக்கம்

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பு மத்தியில் அஜித் நடித்த துணிவு படம் திரையரங்களில் இன்று வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படத்துக்கு அதிகாலை 1 மணிக்காட்சி திரையிடப்பட்டது. இதனால் இரவு முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னையில் ரோகினி திரையரங்கு முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பு மத்தியில் தமிழகம் முழுவதும் அஜித் நடித்துள்ள துணிவு படம் திரையரங்களில் இன்று வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படத்துக்கு அதிகாலை 1 மணிக்காட்சி திரையிடப்பட்டது. இதனால் இரவு முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க;- Thunivu Review : துணிவு படம் எப்படி இருக்கு... தூள் கிளப்பினாரா அஜித்....? துணிவு திரை விமர்சனம் இதோ!!

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கு முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று அஜித் ரசிகர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சிந்தாரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த அஜித் ரசிகர் பரத்குமார் (19) என்பவர் தவறி ரோட்டில் விழுந்தார்.

இதையும் படிங்க;-   கிழித்தெறியப்பட்ட பேனர்கள்... விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் - தடியடி நடத்தி விரட்டியடித்த போலீஸ்

இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!