ப்ளஸ்-2 தேர்வு ரிசல்ட் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published : Apr 16, 2019, 05:47 PM ISTUpdated : Apr 16, 2019, 05:48 PM IST
ப்ளஸ்-2 தேர்வு ரிசல்ட் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சுருக்கம்

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதனுடன், சட்டசபை இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு  இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!