மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் விவகாரம்... வசமாக சிக்கிய காவல்துறை உதவி ஆணையர் கைது..!

Published : Apr 16, 2019, 05:07 PM ISTUpdated : Apr 16, 2019, 05:13 PM IST
மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் விவகாரம்...  வசமாக சிக்கிய காவல்துறை உதவி ஆணையர் கைது..!

சுருக்கம்

லஞ்சம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அசோக் நகரில் உள்ள மசாஜ் சென்டர்களில் மாமூல் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்த்தி வருகின்றனர்.

சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் இருந்து வருகிறார். அப்பகுதியில் செந்தில்குமார் என்பவர் பெண்களை வைத்து சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். ஆனால் இங்கு மசாஜ் சென்டர் நடத்த வேண்டும் என்றால் மாதம் மாதம் 50,000 ரூபாயை கொடுக்க வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். மேலும் பார்லரில் பாலியல் தொழில் செய்யவும் அவர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் செந்தில்குமார் புகார் அளித்தார். பின்னர் அவர் கேட்டது போல 50,000 ரூபாயை கொடுத்து அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் காவல் நிலையம் அருகே பெற்றுக்கொள்ளும் படி அவர் கூறியுள்ளார். இதனையடுத்து இவற்றையெல்லாம் மறைந்திருந்து கண்காணித்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பூந்தமல்லியில் உள்ள வின்சென்ட் ஜெயராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!