பள்ளி வகுப்பறையில் தூக்கில் பிணமாக தொங்கிய ஆசிரியர்... அலறியடித்து ஓடிய மாணவர்கள்..!

Published : Apr 09, 2019, 03:59 PM ISTUpdated : Apr 09, 2019, 04:06 PM IST
பள்ளி வகுப்பறையில் தூக்கில் பிணமாக தொங்கிய ஆசிரியர்... அலறியடித்து ஓடிய மாணவர்கள்..!

சுருக்கம்

சென்னை, நீலாங்கரையில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நீலாங்கரையில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜெனிஃபர் (27) என்ற இளைஞர், நீலாங்ரையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஓராண்டாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவர் பள்ளியின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வகுப்பறைக்கு சென்று பார்த்த போது அந்தோணி ஜெனிஃபர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நீலாங்கரை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.  

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி நிர்வாகத்தினரிடம் ஏற்பட்ட மோதலில் அந்தோணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தோணி ஜெனிஃபருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதற்குள் அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தாரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!