செல்போன் பயன்படுத்தினால் ஓட்டுப்போட முடியாது... தேர்தல் ஆணையம் அதிரடி..!

Published : Apr 15, 2019, 03:15 PM ISTUpdated : Apr 15, 2019, 03:19 PM IST
செல்போன் பயன்படுத்தினால் ஓட்டுப்போட முடியாது... தேர்தல் ஆணையம் அதிரடி..!

சுருக்கம்

வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும் போது செல்போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது. 

வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும் போது செல்போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் கட்சி தலைவர் கொளுத்தும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது. அதில் 16, 17, 18, ஆகிய 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கையின் போது டாஸ்மாக் கடையை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க வரும் போது வாக்குச்சாவடிகளில் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு மையத்தின் 100மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். அதே சமயம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மற்றும் காவல் உயர் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார். 

மேலும் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அடுத்த மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடங்களிலும் நாளை மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவு வரை பரப்புரை செய்யக்கூடாது என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..
தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுகிறேன்! உருக்கமாக பேசிய நடிகை மீரா மிதுன்! அதிரடி காட்டிய கோர்ட்!