கொரோனாவின் கோரப்படியில் சென்னை... ஊரடங்கை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்க திட்டம்..?

By vinoth kumarFirst Published Apr 26, 2020, 6:02 PM IST
Highlights

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 தற்போது வரை தமிழகத்தில் 1,821 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமானவும், 7 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தற்போது கொரோனா தொற்று ஊரக பகுதிகளை காட்டிலும் நகர்ப்புறப் பகுதிகளில் தான் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா மாநகர பகுதியில் கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை நடத்தினார். அதன்பேரில் சென்னை உட்பட தமிழகத்தில் 5 புதிய கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

அதன்பேரில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சி பகுதியில் இன்று முதல் 29-ஆம் தேதி வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் 28ம் தேதி வரை முழுமையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சில பகுதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வராத பட்சத்தில் மேலும் சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக அரசு சார்பில் முடிவுகள் எடுக்கப்படும் உள்ளதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக தற்போது தமிழகத்திலேயே 4ல் ஒரு பங்கு பாதிப்பு சென்னையில் மட்டும் தான் உள்ளது. எனவே சென்னையில் பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஊரடங்கு நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பில்லாத பகுதியை மாற்ற வேண்டுமென்றால் வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!