10 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி !!

By Asianet TamilFirst Published Sep 10, 2019, 11:46 AM IST
Highlights

கடந்த 10 நாட்களாக உயராமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது. அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும்  காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமல் சீராக சென்று கொண்டிருக்கும். அது போல கடந்த 10 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் +0.05 காசுகள் உயர்ந்து 74.56 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் +0.05 காசுகள் உயர்ந்து 68.84 ரூபாயாக இருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

click me!