பலமாக காற்று வீசும்.. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

By Asianet TamilFirst Published Sep 8, 2019, 5:37 PM IST
Highlights

மத்திய வங்க கடலில் பலத்த காற்று  வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர்,வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம்,கடலூர், தஞ்சை, நாகை மற்றும் புதுவையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி மற்றும் கோவையில் மிதமான மழை பெய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை பலமாக காற்று வீசி வருவதால் மீனவர்கள் யாரும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!