பலே கஞ்சா ராணிகளை போலீஸ் எப்படி மடக்கியது தெரியுமா...!! சொல்லவே வாய் கூசுகிறது...!!

By Asianet TamilFirst Published Sep 9, 2019, 11:17 AM IST
Highlights

ஆட்டோவில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை பின் தொடர்ந்து சென்ற போலீசார், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கடத்தல் கும்பல் சென்ற ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர்.

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை சென்னை கோயம்பேட்டில் போலீசார் சுற்றிவலைத்து கைது செய்தனர் அவர்களிடமிருந்து சுமார் 46 கிலே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடத்திய ச்சேசிங் காட்சிகள் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தது.

ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தேனிக்கு கஞ்சா கடத்திக் கொண்டு செல்வதாக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில்  அந்த கடத்தல் கும்பலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை பின் தொடர்ந்து சென்ற போலீசார், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கடத்தல் கும்பல் சென்ற ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர்.

அப்போது அவர்களிடம் 46 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் கும்பலான தேனி பகுதியை சேர்ந்த கணேசன், சசிகலா, பாண்டீஸ்வரி மற்றும் திருச்சியை சேர்ந்த பாத்திமா உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையின்போது,

கஞ்சாவானது ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தேனிக்கு கஞ்சாவை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!