தொடர் சரிவில் பெட்ரோல், டீசல் ரேட்..!

Published : Oct 10, 2019, 10:15 AM IST
தொடர் சரிவில் பெட்ரோல், டீசல் ரேட்..!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 5 காசுகள் குறைந்து 76.38 ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலை 6 காசுகள் குறைந்து 70.51 ரூபாயாக விலையிலேயே விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வந்தது. தினமும் 20 காசுகளுக்கு மேலாக விலை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?