சீனாவில் இருந்து விமானம் மூலம் வந்த குண்டு துளைக்காத 4 சொகுசு கார்கள்...

By sathish kFirst Published Oct 9, 2019, 6:22 PM IST
Highlights

சீனாவில் இருந்து "ஏர்- சீனா 747" விமானம் மூலம் 4 குண்டு துளைக்காத அதி நவீன சொகுசு 4 கார்கள் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி நேரில் சந்தித்து 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக சீனாவில் இருந்து "ஏர்- சீனா 747" விமானம் மூலம் 4 குண்டு துளைக்காத அதி நவீன சொகுசு 4 கார்கள் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வரை விமானத்தில் வந்து அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்ல உள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தனது பிரத்யேக கார் மூலமாக மாமல்லபுரம் செல்ல உள்ளார். 

தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு வசதிகள் கொண்ட விலையுயர்ந்த சொகுசு கார்கள், புறப்பட்ட 8 வினாடியில் 100 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டும், ஒவ்வொரு காரும் 18 அடி நீளமும், 6.5 அடி அகலமும், 5 அடி உயரமும், 3152 கிலோ எடையும் கொண்டது.  ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாங்கினாலும் இந்த கார் சேதம் அடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பிரதமருடன் ஏறக்குறைய 200 பேர் பாதுகாப்பிற்காக வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துப் பேசுவதற்குக் குண்டு துளைக்க முடியாத கண்ணாடி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி 150க்கு மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

click me!