சுபஸ்ரீ தந்தை எடுத்த அதிரடி முடிவு... அதிர்ச்சியில் தமிழக அரசு..!

By vinoth kumarFirst Published Oct 9, 2019, 6:27 PM IST
Highlights

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தந்தை ரவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தந்தை ரவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் செப்டம்பர் 12-ம் தேதி பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக அரசின் இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், தமிழக அரசிடம் ரூ. 1 கோடி இழப்பீடு பெற்றுத் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சிறப்பு விசாரணை குழு அமைக்கவும் பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரவும் தன்னுடைய மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டவிரோதமாக பேனர் வைத்ததால் மகள் உயிரிழந்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

click me!