மக்களே அச்சம் வேண்டாம்.. கருப்பு பூஞ்சை குறித்து சுகாதாரத்துறை செயலர் சொன்ன குட் நியூஸ்...!

By vinoth kumarFirst Published May 20, 2021, 1:08 PM IST
Highlights

கொரோனா சிகிச்சை முடித்து வருபவர்களுக்கு தான் இந்த நோய் பரவுகிறது என்பது முற்றிலும் தவறானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கொரோனா சிகிச்சை முடித்து வருபவர்களுக்கு தான் இந்த நோய் பரவுகிறது என்பது முற்றிலும் தவறானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளிக்கையில்;- தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால், உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோயானது முழுமையாக குணப்படுத்தக்கூடியதுதான்.  கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

அதில் 7 பேர் சர்க்கரை நோயாளிகள் 2 பேர் சர்க்கரை நோய் இல்லாதவர்கள். கொரோனா சிகிச்சை முடித்து வருபவர்களுக்கு தான் இந்த நோய் பரவுகிறது என்பது முற்றிலும் தவறானது. இது நீண்டகாலமாகவே இருந்து வரக்கூடிய ஒரு நோய்தான் என்பதை மக்கள் உணரவேண்டும். தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.  

ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கு இதுப்போன்ற தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கரும்பூஞ்சை பரவல் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் 2 வாரங்கள் பின்தங்கி உள்ளதால் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது. மக்கள் தயவு செய்து நோய்க்கட்டுப்பாட்டு பகுதியை மதித்து, அந்த பகுதிக்கு செல்லவோ, அங்கிருந்து வெளிவரவோ கூடாது. நோய் கண்டறியப்பட்ட உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள். முழு ஊரடங்கை மக்கள் ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

click me!