பெற்றோர் அச்சமடைய வேண்டாம்! களத்தில் இறங்கிய ஆளுநர்! அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதிரடி உத்தரவு!

By vinoth kumar  |  First Published Dec 28, 2024, 7:58 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டி  வருகின்றனர். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: இந்த முறை பொங்கல் பரிசு ரூ.1000 கிடையாது! கைவிரித்த தமிழக அரசு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் வருகையையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தவிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துயரமிகு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்-வேந்தர் அவர்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மாணவ மாணவியர்களுடன் உரையாடவும், நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திட தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்திடவும் வருகை தந்தார்.

இவ்வாய்வின் போது, தமிழ்நாடு ஆளுநர்-வேந்தர் அவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆளுநர்-வேந்தர் அவர்கள் மாணவர்களுடன் (பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக) கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் வாயிலாக பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவர்கள் கூறிய கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பொறுமையாக கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: மகன் அன்புமணியை வெளியே போகச் சொல்லும் அளவுக்கு முகுந்தனுக்கு முக்கியத்துவம்! யார் இவர் தெரியுமா?

ஆளுநர் அவர்கள் பல்லைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்று கூறியதுடன் மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும் மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தவிட்டுள்ளார். 

click me!