சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அப்போது பெண் வழக்கறிஞர் வரலட்சுமி தரப்பில் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் போலீசார் விசாரணை குறைபாடு இருப்பதாக தெரிகிறது. வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட போதிலும் சார் என்ற சொல்லப்படும் நபர் யார், அவரது பின்னணி என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆகையால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
undefined
இதையும் படிங்க: 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எத்தனை பொது விடுமுறை? பள்ளி மாணவர்களுக்கு எந்த மாதத்தில் லீவு அதிகம் தெரியுமா?
இந்த வழக்கு நேற்று மாலை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஒருவர் தான் குற்றவாளி என காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்? விசாரணை அதிகாரி ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர். அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார். செய்தியாளர்களை சந்திக்கும் முன் அரசிடம் அனுமதி பெற்றாரா காவல் ஆணையர்? அரசு அதிகாரிகளின் நடத்தை விதிகளின்படி அனுமதி பெற்றாரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மேலும் அண்ணா பல்கலைக்கழகம் இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அமைச்சருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது பொருந்தாத வாதம் என நீதிபதிகள் கூறினர். யார் எப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை? புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இனி விசாரணை செய்யும். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக வந்து புகார் அளித்தது பாராட்டுக்குரியது. FIR பொதுவெளியில் கசிந்ததற்காக பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இந்த தொகையை குற்றத்தில் தொடர்புடையவர்களிடம்(காவல்துறை அதிகாரிகள் உட்பட) வசூலிக்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது மற்ற இழப்பீடுகளைத் தடுக்காது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் எதிரொலி! அனைத்துக் கல்லூரிகளுக்கும் அமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு!
மாணவியின் கல்விச் செலவு விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் பல்லைக்கழகம் ஏற்க வேண்டும். மாணவிக்கு தேவையான கவுன்சிலிங் மற்றும் உதவிகளை வழங்க வேண்டும். மாணவி தனது படிப்பைத் தொடர்வதை அண்ணா பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும். மேலும் மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆர். குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பு அளிக்க டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.