
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டதோ அதை தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது. இது தெரியாமல் சிலர் முதல் தகவல் அறிக்கையை இப்படி போட்டிருக்கலாம் அப்படி போட்டிருக்கலாம் என சொல்கிறார்கள். இது போன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாக கூடாது. அது தவறு தான். முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: FIR வெளியான விவகாரம்! அண்ணாமலை எழுதிய ஒரே கடிதம்! தமிழகத்தை பார்த்து தேசிய மகளிர் ஆணையம் சொன்ன ஒற்றை வார்த்தை!
போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் FIR எனும் முதல் தகவல் அறிக்கை, இணையதளத்தில் தானாகவே லாக் ஆகிதான் இருக்கும். பாதிக்கப்பட்டோரின் விபரங்களை பார்க்க முடியாது. ஆனால், IPC-யில் இருந்து புதிய சட்டங்களான BNS-க்கு மாற்றப்பட்டதால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இந்த நேரத்தில் சிலர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கும் FIR நகல் கொடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் FIR லீக் ஆகியிருக்கலாம் என்றார்.
இதுவரை ஞானசேகர் மீது 20 வழக்குகள் உள்ளது. திருட்டு போன்ற வழக்குகள் உள்ளது. ரவுடித்தனம், பெண்கள் தொடர்பான வழக்குகள் அவர் மீது இல்லை. வேறு பெண்களிடம் இருந்து புகார் இதுவரை பெறப்படவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நடக்கும் போது செல்போனை Flight Modeல் போட்டு விட்டு அம்மாணவியை பயமுறுத்த சார் என யாரிடமோ பேசுவது போல பாவனை காட்டியுள்ளான்.
அண்ணா பல்கலைகழகத்தில் 70 சிசிடிவி உள்ளது. அதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது. பெண் புகார் கொடுத்த அடுத்த நாளில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது. காவல்துறை எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆய்வுக் கூட்டங்களில் முதலமைச்சர் கூறியது. எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை. அதன்படி செயல்பட்டு வருகிறோம்.
போராட்டம் நடத்துவதற்கு என சில இடங்கள் உள்ளது. அதை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைகழகத்தில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பில் தான் உள்ளது. எப்போதும் இரண்டு ரோந்து வாகனங்கள் பணியில் இருக்கும். 140 பேர், 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன. இன்னும் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையை நம்பி பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.
இதையும் படிங்க: மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை! காவல்துறையோ மனரீதியாக வன்கொடுமை! அன்புமணி!
அவர் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி பாதுகாப்பாக உள்ளார். இந்த மாணவி போன்று இன்று எந்த மாணவி பாதிக்கப்பட்டாலும் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும். புகார் அளித்தால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது 8 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.