Chennai Heavy Rain Alert: தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இரவு 7 மணிக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீண்டும் கைது! என்ன காரணத்திற்காக தெரியுமா?
undefined
இந்நிலையில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! எங்கெல்லாம் மழை ஊத்தப்போகிறது?
அதன்படி அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, மாம்பலம், அசோக் நகர், கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.