மாணவரிடம் சாதி பற்றி பேசிய பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சக மாணவர்களின் சாதி என்ன என்று மாணவர்களிடம் அனுராதா கேட்கும் ஆடியோ வெளியான நிலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவரிடம் சாதி பற்றி பேசிய பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சக மாணவர்களின் சாதி என்ன என்று மாணவர்களிடம் அனுராதா கேட்கும் ஆடியோ வெளியான நிலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ளது பச்சையப்பன் கல்லூரி, சென்னையில் உள்ள கல்லூரிகளிலேயே மிகப் பழமையான கல்லூரி இது, ஏராளமான மாணவர்கள் அதில் பயின்று வருகின்றனர். இதில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றுபவர் அனுராதா, அத்துறையின் தலைவராகவும் உள்ளார், கடந்த மாதம் இவர் மாணவர் ஒருவருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம்... ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு .
அந்த ஆடியோவில் அவர் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவனிடம் பேசுகிறார், அப்போது ஒரு சில மாணவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களின் சாதியை கூறி, அவர்களை கொச்சைப்படுத்துவம் வகையில் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதாவது. அந்த ஆடியோவில் அவர் பேசிய விவரமானவது, சில சமூகத்தை சேர்ந்த மாணவர்கள்தான் நம்மை ரொம்ப கஷ்டப்படுத்துராங்க, அவர்கள் யார் என்று உனக்கு தெரியும் எனக் கூறும் அவர், மாணவர்களின் பெயரைச் சொல்லி, அவன் எஸ்.சியா என கேட்கிறார் அதற்கு அந்த மாணவன் ஆம் எனக் கூற ஐயோ என நோந்து கொண்டு பேசுகிறார்,
இதையும் படியுங்கள்: பீகாரை போல் தமிழகத்திலும் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்- பாரிவேந்தர் ஆவேசம்
அதுமட்டுமின்றி தன்னிடம் உரையாடும் மாணவனிடமே, எனக்கு நீ எந்த சாதின்னுகூட தெரியாது, நீ என்ன சாதி கண்ணு.? எனந்த ஆசிரியை கேட்கிறார், அதற்கு அந்த மாணவன் பி.சி எனக் கூற பி.சின்னு முகத்தைப் பார்த்தாலே தெரியுது என கூறுவதுடன் முகத்தைப் பார்த்தே சாதியைச் கண்டுபிடிப்பேன் என ஆசிரியை அதில் கூறுகிறார், இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து பலரும் அந்த ஆசிரியையை கண்டித்து வந்தனர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சாதிவன்மத்துடன் பேசிய அனுராதாவை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன, இந்நிலையில் சாதி வெறியுடன் பேசிய பேராசிரியர் அனுராதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி நீதியரசர் ராஜூவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் அவரின் அனுமதி பெற்று கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு அனுராதாவை சஸ்பெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது, ஏற்கனவே அந்த ஆசிரியை சாதி வன்மத்துடனே பேசிய விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் அவரை காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரிக்கு பணியிடமாற்றம் செய்தது ஆனால் அங்கு செல்ல மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து சென்னை பச்சையப்பனில் அவர் பணியாற்றி வந்தநிலையில் சாதி வன்மத்தை வெளிப்படுத்தி சஸ்பெண்ட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.