3000 சதுர அடிக்கு மேல் உள்ள அனைத்து கடைகளும் மூட உத்தரவு... தமிழக அரசு அதிரடி..!

By vinoth kumarFirst Published Apr 28, 2021, 1:26 PM IST
Highlights

3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த திங்கள்கிழமை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள், வழிபாட்டு தளங்களை மூட  உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில், சிறிய கடைகள் ஏ.சி இல்லாமல் இயங்கலாம் என்றும் தெரிவித்தது. இதுகுறித்து வணிகர்கள் கேள்வி எழுப்பினர். பெரிய கடைகள் என்றால் எந்த வகையில் அரசு சொல்கிறது என்று கேட்டனர். எனவே இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார்.

 அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்.அதில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகள் மற்றும் ஷோரூம்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!