#BREAKING கொரோனா மையம் தொடங்க அனுமதி பெற தேவையில்லை... சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Apr 28, 2021, 11:43 AM IST
Highlights

சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள் கொரோனா சிக்சசை மையம் தொடங்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள் கொரோனா சிக்சசை மையம் தொடங்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி பாதிப்பு 16,000ஐ நெருங்கி உள்ளது. உயிரிழப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகரில் நேற்று மட்டும் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வருவதால், மூன்றடுக்கு படுக்கை தயார் செய்ய உத்தரவிட்ட சென்னை மாநகராட்சி பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள் கொரோனா சிக்சசை மையம் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.மாநகராட்சியிடம்  அனுமதி பெறவேண்டும் என அவசியம் இல்லை. விண்ணப்பம் தேவையில்லை. மாநகராட்சி அலுவலக அதிகாரிக்கு இ மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு சிகிச்சை மையம் தொடங்கலாம் என்றார்.

click me!