அடுத்த சில நாட்களுக்கு மக்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 27, 2021, 11:56 AM IST
Highlights

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக கடந்த 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் விதமாக நேற்று முதல் தமிழகத்தில் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை, வணிக வளாகங்கள், திரையரங்குகளை மூட உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்ட முழு ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளதாகவும், மக்கள் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களான மாஸ்க் அணிவது, தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வது ஆகியவற்றை தடுத்தால் மேலும் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார். 

பொதுமக்கள் அனைவரும் அடுத்த சில நாட்களுக்கு தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், சிறிய கடைகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் நாளோன்றுக்கு 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாவதாகவும், அதில் 30 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்துக் கொண்டாலும் கொரோனா பரவலை முழுமையாக குறைக்க முடியும் என்றும் அறிவுறுத்தினார். 

click me!