ஞாயிறு முழு ஊரடங்கால் கை மேல் பலன்... சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன குட்நியூஸ்...!

By vinoth kumarFirst Published Apr 27, 2021, 11:52 AM IST
Highlights

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்து கொண்டால் கொரோனா பரவல் முழுமையாக குறைய வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்து கொண்டால் கொரோனா பரவல் முழுமையாக குறைய வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- ஞாயிறு முழு பொதுமுடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்திருக்கிறது. அடுத்த சில நாட்கள் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவல் வேகம் தமிழகத்தில் குறைந்திருக்கிறது. 

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, மிகத் தீவிரமாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்வதை குறைத்துக் கொள்வது, மேலும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும். மாஸ்க் போடாமல் வெளியே வராதீர்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்ற மாநிலத்தைவிட தமிழகத்தில் கொரோனா குறைவாக இருப்பதாக நினைத்து மக்கள் வெளியே வரக்கூடாது. 

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, நாள்தோறும் பதிவான கொரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்னும் தீவிரமாக கட்டுப்பாடை பின்பற்றினால், கொரோனா பரவல் குறையும் நிலையை அடையலாம் என்று தெரிவித்துள்ளார்.கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் அளவிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார். கொரோனா தடுப்பூசியை தமிழகம் அதிகம் வீணாக்குவதாக கூறுவது சரியான தகவல் அல்ல எனவும் சுகாதாரத்துறை செயலாளர்  கூறியுள்ளார். 

click me!