அமெரிக்காவைச் சுட்டிக்காட்டி ஐகோர்ட்டில் வழக்கு... 12 வாரத்திற்குள் முடிவெடுக்க தலைமை நீதிபதி உத்தரவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 27, 2021, 12:22 PM IST
அமெரிக்காவைச் சுட்டிக்காட்டி ஐகோர்ட்டில் வழக்கு... 12 வாரத்திற்குள் முடிவெடுக்க தலைமை நீதிபதி உத்தரவு...!

சுருக்கம்

அமெரிக்காவைப் போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு என பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மயிலவன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கொரோனா பரவலை தடுக்க 2020ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காலத்தில், தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், அமெரிக்காவைப் போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு என பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

தற்போது இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஊழியர்களின் ஊதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்துள்ள சலுகைகள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவில்லை என்பதால், ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரர் கோரும் உத்தரவை பிறப்பிக்க இயலாது எனக் கூறி, இதுசம்பந்தமாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, முடிவெடுத்து 12 வாரங்களில் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!