
மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில வாலிபரை கை, கால், கழுத்தைக் கயிற்றால் கட்டி ரயிலில் அழைத்து சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(25). இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பணியாற்றி வந்தார். அப்போது பிரகாஷூக்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சக தொழிலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே சக ஊழியர்கள் இதுகுறித்து பிரகாஷின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- பள்ளி மாணவி குளிப்பதை வளைச்சு வளைச்சு போட்டோ.. வீடியோ.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இதனையடுத்து பிரகாஷை சொந்த ஊருக்கு அழைத்து வருமாறு பெற்றோர் கூறினர். அதன்படி அவருடன் பணியாற்றும் ராம்குமார் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் நேற்று பிரகாஷை அழைத்து கொண்டு ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் சென்றுள்ளனர். அப்போது ரயிலில் திடீரென பிரகாஷ் கூச்சலிட்டு பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- திமுக நிர்வாகியை இதற்காக தான் கொலை செய்தோம்.! பாமக பிரமுகர் உட்பட 17 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!
இதனால் ராம்குமார் மற்றும் சிறுவன் இருவரும் சேர்ந்து பிரகாஷின் கை, கால்களைக் கயிற்றால் கட்டி அழைத்துச் சென்றுள்ளனர். கயிற்றால் கட்டிய பிறகும் கூச்சலிட்டதால் வேறு வழியின்றி பிரகாஷின் கழுத்தையும் துணியால் கட்டி இருக்கையின் கீழ் படுக்க வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பிரகாஷின் கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.