Covid19: கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்தாலும் பரிசோதனை தேவையில்லை? புதிய வழிகாட்டு நெறிமுறை கூறுவது என்ன?

By vinoth kumarFirst Published Jan 11, 2022, 10:10 AM IST
Highlights

தற்போது நிலவி வரும் சூழலைக் கருத்தில்கொண்டு, எவருக்கெல்லாம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும், எவரெல்லாம் வீட்டுத்தனிமையை நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பன குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தோருக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் கூறியிருப்பதாவது;- தற்போது நிலவி வரும் சூழலைக் கருத்தில்கொண்டு, எவருக்கெல்லாம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும், எவரெல்லாம் வீட்டுத்தனிமையை நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பன குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.

அதில், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தல் அவசியம் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ, இணை நோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். 

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் உள்ளிட்டோருக்கும் பரிசோதனை முக்கியம். அதேநேரத்தில் இந்த பாதிப்புகள் எதுவும் இன்றி கொரோனா தொற்றுடன் தொடர்பில் இருந்து அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் குணமடைந்தாலும், மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

click me!