Lockdown Tamilnadu : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Jan 11, 2022, 8:40 AM IST

பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 1 முதல் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. சென்னை, செங்கலபட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 1 முதல் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிப்பதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து பிஇ, பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தப்படுவது குறித்து தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ம் தேதி பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன், கல்விதொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும். 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல்  நேரடி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

click me!