மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... விசாரணை வளையத்தில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 28, 2021, 01:51 PM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... விசாரணை வளையத்தில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்...!

சுருக்கம்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியர் ஆனந்த் மீதும் புகார்கள் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்து வருவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. கே.கே.நகரில் உள்ள பத்ம  சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள்  காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியர் ஆனந்த் மீதும் புகார்கள் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது முன்னாள் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு அந்த ஆசிரியர் வாட்ஸ் அப்  மூலமாக மறுப்பு தெரிவித்திருந்தது வைரலானது. இதையடுத்து முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு புகார் கடிதம் எழுதினர். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து பள்ளி நிர்வாகம் வணிகவியல் ஆசிரியர் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. 

மாணவிகள் அளித்துள்ள புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆனந்த் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை இன்றிலிருந்து தொடங்கியதாக சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாக்களில் வலம் வரும் ஆனந்த மீதான புகார்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். a

PREV
click me!

Recommended Stories

TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!