குட்நியூஸ்.. சென்னை வரும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி.. அப்பல்லோ மருத்துவமனையில் ஜூன் மாதம் முதல் செலுத்தப்படும்

Published : May 28, 2021, 12:46 PM ISTUpdated : May 28, 2021, 12:47 PM IST
குட்நியூஸ்.. சென்னை வரும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி.. அப்பல்லோ மருத்துவமனையில் ஜூன் மாதம் முதல் செலுத்தப்படும்

சுருக்கம்

ஜூன் முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூன் முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் பல்வேறு வகையான தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் மட்டும் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. 

இதனையடுத்து, ஐதராபாத்தில் கடந்த 17ம் தேதி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிசோதனை முறையாக செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், ஜூன் 2வது வாரம் முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!