பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி விரைவில் மூடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
சென்னயில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதன் காரணமாக பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி விரைவில் மூடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுங்கச்சாவடியை மூட தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று சுங்கச்சாவடியில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்று அரசு சார்பில் கருத்துறு அனுப்பி உள்ளதாகவும் உரிய அனுமதி கிடைத்த உடன் சுங்கச்சாவடி மூடப்படும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
undefined
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏற்கனவே பெருங்குடி,, தொரைப்பாக்கம், மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலை, ஈ.சி.ஆர். ஓ.எம்.ஆர் இணைப்பு சாலை ஆகிய இடங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் மெட்ரோ பணிகளுக்காக மூடப்பட்டன. தற்போது நாவலூர் சுங்கசாவடி மூடப்பட உள்ளது. இதன் மூலம் தினமும் ரூ.7 லட்சம் வரை இழப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில் 2024-ல் திறக்கப்பட உள்ள புதிய மெட்ரோ ரூட் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 16 கி.மீ லைன் கட்டுமான பணிகள் 2024-ல் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு முதல் பயணிகள் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26 கி.மீ மெட்ரோவின் ஒரு பகுதியாக இந்த 16 கி.மீ மெட்ரோ ரூட் உள்ளது. இந்த கட்டம் 2 பணிகள் 2025 மற்றும் 2028 என 2 கட்டங்களாக திறக்கப்படும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.