இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்.. அப்போது இதெல்லாம் நடக்கும்.. சபதம் போட்ட சோனியா காந்தி..

Published : Oct 14, 2023, 09:25 PM ISTUpdated : Oct 14, 2023, 10:55 PM IST
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்.. அப்போது இதெல்லாம் நடக்கும்.. சபதம் போட்ட சோனியா காந்தி..

சுருக்கம்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது நடைமுறைக்கு வரும் என்பதில் அனைவருக்கும் குழப்பும் இருக்கிறது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார் சோனியா காந்தி.

திமுக மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் எம்பியுமான சுப்ரியா சுலே, சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “அறிவியல், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் இப்போது மகளிர் சாதித்து வருகிறார்கள்.  பெண்ணுக்கு கல்வி கற்று கொடுத்தால், ஒரு குடும்பத்திற்கே கல்வி கற்று தரப்படுகிறது.  காந்தியின் அறவழி போராட்டம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்திரா காந்தியின் தலைமை பண்பு, பெண் எப்படி தலைமை ஏற்று செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு. பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற வரலாற்று சிறப்பு மிக்க சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நமது தொடர் போராட்டத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

இருப்பினும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதில் அனைவருக்கும் குழப்பும் இருக்கிறது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டம் அமலுக்கு வரும் . அண்ணா, கருணாநிதி செயல்படுத்திய திட்டங்கள் பெண்கள் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று பேசினார்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளான் இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - முழு விபரம் இதோ !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!