அதிர்ச்சி தகவல்... இன்னும் இவ்வளவு பேர் கொரோனா தடுப்பூசி ‘செகண்ட் டோஸ்’ போட்டுக்கொள்ளவில்லையா?

By vinoth kumarFirst Published Mar 19, 2021, 1:19 PM IST
Highlights

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக இந்தியாவிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதையடுத்து, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனோ தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக்கொண்டு நான்கு வாரங்களுக்குப் பிறகு 2வது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் அதிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து தான் கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும். இந்தியாவில் வழங்கப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பு மருந்துகளும் இரண்டு டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியவை ஆகும்.

தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் எடுத்துக்கொண்ட நபர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள முன்வரவில்லை. தமிழகத்தில் நான்கு வாரங்கள் முன்பாக 2,46,218 பேர் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர். ஆனால், இவர்களில் தற்போது 1,43,704 பேர் தான் 2வது டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். அதாவது 1, 20,514 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

click me!